தனது மனைவியை துப்பாக்கியானல் சுட்டுக்கொன்றது தொடர்பில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள Lans Koperal அந்தஸ்தை கொண்ட போலீஸ்காரர் ஒருவரை புலன் விசாரணைக்கு ஏதுவாக மேலும் 5 நாட்களுக்கு தடுப்புக்காவலில் வைப்பதற்கு கங்கார் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று அனுமதி அளித்துள்ளது.
கடந்த மார்ச் 5 ஆம் தேதி கங்கார், சிம்பாங் அம்பாட், Kampung Bendera Baru வில் நிகழ்ந்த இச்சம்பவம் தொடர்பில் திரெங்கானுவை சேர்ந்த 27 வயதுடைய போலீஸ்காரர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அந்த போலீஸ்காரர் தற்போது மன நல சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக கங்கார் மாவட்ட போலீஸ் தலைவர் ACP Yusaharifussin Mohd Yusof தெரிவித்துள்ளார்.








