Dec 2, 2025
Thisaigal NewsYouTube
ஐவர் கைது செய்யப்பட்டனர்
தற்போதைய செய்திகள்

ஐவர் கைது செய்யப்பட்டனர்

Share:

கிள்ளான் பள்ளதாக்கு மற்றும் பகாங் மாநிலம் ஆகியவற்றில் கிளினிக்குகள் மற்றும் மருந்தகங்கள் ஆகியவற்றை இலக்காகக் கொண்டு கொள்ளையிட்டு வந்த Adam கும்பலைச் சேர்ந்த ஒரு பெண் உட்பட ஐவரை போலீசார் கைது செய்துள்ளனர்.


இந்த ஐவர் பிடிப்பட்டதன் மூலம் சுமார் 6 ஆயிரம் வெள்ளி ரொக்கம் மற்றும் சில மருந்துப் பொருட்களை போலிசார் பறிமுதல் செய்திருப்பதாக செந்தூல் மாவட்ட போலிஸ் தலைவர் Beh Eng Lai தெரிவித்தார்.
தவிர அந்த கும்பலிடமிருந்து, இரு கார்கள் மற்றும் கொள்ளை அடிப்பதற்குப் பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும் மீட்கப்பட்டதாக Beh Eng Lai கூறினார்.

Related News