Jul 27, 2026
Thisaigal NewsYouTube
காதலியின் கணவரால் தாக்கப்பட்டு காயமடைந்த காதலன்
தற்போதைய செய்திகள்

காதலியின் கணவரால் தாக்கப்பட்டு காயமடைந்த காதலன்

Share:

சிபு, ஏப்ரல் 17-

மாற்றான் மனைவியுடன் கள்ள உறவில் ஈடுபட்டதாக நம்பப்படும் ஆடவர் ஒருவர் அந்த மாதுவின் கணவரால் நையபுடைக்கப்பட்டார்.

கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதி மாலை 10.29 மணியளவில் பாதிக்கப்பட்ட 24 வயதுடைய நபரிடமிருந்து போலீஸ் புகார் கிடைக்கப் பெற்றதாக சிபு மாவட்ட போலீஸ் தலைவர் உதவி கமிஷனர் சுல்கிப்லி சுஹைலி தெரிவித்தார்.

அதே நாள் மாலை 5 மணியளவில் சிபு, ஜாலான் பஹ்லாவான்-னில் பாதிக்கப்பட்ட நபர் பேருந்திற்காக காத்திருந்த போது அவரின் காதலின் கணவர் உட்பட அடையாளம் தெரியாத இன்னும் மூன்று நபர்கள் அவரை தாக்கியதாக சுல்கிப்லி சுஹைலி கூறினார்.

மேலும், அந்நபர் வலுக்கட்டாயமாக கார் ஒன்றில் ஏற்றப்பட்டு ஜாலான் செந்தோசா-வில் உள்ள ஒரு வீட்டிற்கு கொண்டு வரப்பட்டதாக சுல்கிப்லி சுஹைலி ஓர் அறிக்கையில் அறிவித்தார்.

இச்சம்பவம் தொடர்பாக 26 வயதான அப்பெண்ணின் கணவர் கைது செய்யப்பட்டு ஏப்ரல் 18 ஆம் தேதி வரையில் மூன்று நாட்கள் தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருப்பதாக சுல்கிப்லி சுஹைலி குறிப்பிட்டார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்