Dec 2, 2025
Thisaigal NewsYouTube
100 கோடி வெள்ளி மதிப்புள்ள சுய கடன் விண்ணப்பங்களுக்கு இ.பி.எப் அனுமதி
தற்போதைய செய்திகள்

100 கோடி வெள்ளி மதிப்புள்ள சுய கடன் விண்ணப்பங்களுக்கு இ.பி.எப் அனுமதி

Share:

இவ்வாண்டு ஜூன் 11ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் தொழிலாளர் சேமநிதி வாரியமான இ.பி.எப்.பின் இரண்டாவது கணக்கிலிலுள்ள பணத்தை வைத்து கடன் பெறுவது தொடர்பில், 98 கோடியே 19 லட்சம் வெள்ளி மதிப்புள்ள விண்ணப்பங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது.

அந்த தொகையில் 87 கோடியே 86 லட்சம் வெள்ளி மலேசியா பியுல்டிங் சொசைட்டி பெர்காட் வாயிலாகவும் 10 கோடியே 33 லட்சம் வெள்ளி பேங்க் சிம்பானான் நேஷ்னல் மூலமாகவும் செலுத்தப்பட்டது அது தெரிவித்ததுள்ளது.

எப்.எஸ்.ஏ. 2 எனப்படும் இந்த கடனுதவித் திட்டத்திற்கு 168,925 பேரிடமிருந்து விண்ணப்பங்கள் கிடைத்த வேளையில், 88,414 பேரின் விண்ணப்பங்கள் தகுதி பெற்றுள்ளன. அவர்களில் 47,696 பேர் இந்த கடனுதவியை ஏற்றுக் கொள்ள ஒப்புதல் அளித்துள்ளதாக நிதி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

Related News