May 21, 2026
Thisaigal NewsYouTube
ஆடவரின் உடல் முதலையின் வாயில் கண்டு பிடிக்கப்பட்டது
தற்போதைய செய்திகள்

ஆடவரின் உடல் முதலையின் வாயில் கண்டு பிடிக்கப்பட்டது

Share:

கினாபாத்தாங்ஙான்,பிப்.8
சபா, கினாபாத்தாங்ஙான் – னில் கடந்த புதன்கிழமை முதல் காணாமல் போன 48 வயது Roberto Martinus என்பவர், தீவிரமாக தேடப்பட்டு வந்த வேளையில் அவரின் உடல் முதலையின் வாயில் சிக்கிக்கிடந்தது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

இன்று வியாழக்கிழமை காலையில் கம்போங் பாரிஸ் 2 என்ற இடத்திற்கு அருகில் சுங்ஙாய் கோயா நதி முகத்துவாரத்தில் காணப்பட்ட ஒரு ராட்ஷச முதலையை வன அதிகாரிகள் துப்பாக்கினால் சுட்டப் போது காணாமல் போன ஆடவரின் உடலின் பெரும் பகுதி முதலையின் வாயில் சிக்கிக் கிடந்ததாக கினாபாத்தாங்கான் தீயணைப்பு, மீட்புப்படைத் தலைவர் நுருல் அஸ்லான் ஷா தெரிவித்தார்.

போலீஸ் மற்றும் வன அதிகாரிகளின் உதவியுடன் ராட்ஷச முதலையின் வாயிலிருந்து அந்த நபரின் உடல் மீட்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

Related News