Oct 10, 2026
Thisaigal NewsYouTube

பணம் முறைகேடு: என்ஜிஓ தலைவர் கைது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
பணம் முறைகேடு: என்ஜிஓ தலைவர் கைது

மலாக்கா, ஜூன்.13-

தங்கள் அமைப்புக்கு வழங்கப்பட்ட நிதியைத் தவறாகப் பயன்படுத்தியது மற்றும் அதிகாரத் துஷ்பிரயோகம் ஆகிய குற்றச்சாட்டின் பேரில் என்ஜிஓ அமைப்பு ஒன்றின் தலைவரை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் கைது செய்துள்ளது. விசாரணைக்கு ஏதுவாக அந்த என்ஜிஓ இயக்கத் தலைவர் இன்று காலையில் மலாக்கா நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் சிவசங்கரி நாகலிங்கம் முன்னிலையில் நிறுத்தப்பட்டு, 7 நாள் தடுத்து வைப்பதற்கான உத்தரவை எஸ்பிஆர்எம் பெற்றுள்ளது.

இயக்கத்தின் நிதி மோசடி தொடர்பாக நேற்று நால்வர் கைது செய்யப்பட்ட வேளையில் இன்று இயக்கத் தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார். அந்த நால்வர் செய்த மோசடிக்கு, இயக்கத் தலைவர் உடந்தையாக இருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →