Mar 17, 2026
Thisaigal NewsYouTube
நெடுஞ்சாலைகளின் போக்குவரத்து நெரிசல் கட்டுப்பாட்டில் உள்ளது
தற்போதைய செய்திகள்

நெடுஞ்சாலைகளின் போக்குவரத்து நெரிசல் கட்டுப்பாட்டில் உள்ளது

Share:

சீனப்புத்தாண்டை முன்னிட்டு இரண்டு நாட்கள் இலவச டோல் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து நாடு முழுவதும் உள்ள பிரதான நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து நெரிசல் இன்று காலை 9:30 மணிவரையில் கட்டுப்பாட்டில் இருப்பதாக தெரியவந்துள்ளது.

தலைநகரிலிருந்து காராக் வரையிலான கிழக்கு கடற்கரை நெடுஞ்சாலை 1 (LPT1) வழியாக செல்லும் இரு பாதைகளிலும் போக்குவரத்து சீராக இருப்பதாக மலேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அறிவித்துள்ளது.

வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையில் சாலை விபத்து ஏற்பட்டிருந்து வாகனங்கள் மெதுவாக பயணித்தாலும் போக்குவரத்து இன்னும் கட்டுப்பாட்டில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

தாப்பா - விலிருந்து கோப்பெங் -கிற்கு செல்லும் வடக்கு நெடுஞ்சாலையில் வாகனங்கள் மெதுவாக நகர்வதுடன் Bertam -மிலிருந்து சுங்ஙாய் பெத்தானிக்கு செல்லும் வழியில் ஒரு சாலை விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றன.

நெடுஞ்சாலைகளில் வாகனத்தில் பயணிக்கும் போது கவனமாக இருக்குமாறும், நெடுஞ்சாலை அதிகாரிகள் வழக்கும் அறிவுறுத்தல்களுக்கு கீழ்ப்படியுமாறும் மலேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் கேட்டுக் கொண்டது.

Related News

3 பேர் உயிரிழப்பு: மின்சார அமைப்புகளை நெருங்க வேண்டாம் என தெனாகா நேஷனல் எச்சரிக்கை

3 பேர் உயிரிழப்பு: மின்சார அமைப்புகளை நெருங்க வேண்டாம் என தெனாகா நேஷனல் எச்சரிக்கை

தங்காக் தொழிற்பேட்டையில் கழுத்தில் குத்து காயங்களுடன் பெண்ணின் சடலம்

தங்காக் தொழிற்பேட்டையில் கழுத்தில் குத்து காயங்களுடன் பெண்ணின் சடலம்

பொதுமக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்திய வழக்கில் சம்ரி வினோத் மீது குற்றம்சாட்டப்பட்டது / குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினார்

பொதுமக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்திய வழக்கில் சம்ரி வினோத் மீது குற்றம்சாட்டப்பட்டது / குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினார்

சுங்கை சிப்புட் தோட்டத் தொழிலாளர்களின் நில  விவகாரம் - 27 ஆண்டு கால போராட்டத்திற்கு தீர்வுகாண நடவடிக்கை!

சுங்கை சிப்புட் தோட்டத் தொழிலாளர்களின் நில விவகாரம் - 27 ஆண்டு கால போராட்டத்திற்கு தீர்வுகாண நடவடிக்கை!

பெருநிறுவன மோசடிக் குற்றச்சாட்டு / வர்த்தகர் விக்டர் சின்க்குச் சொந்தமான பல இடங்களில் போலீசார் அதிரடிச் சோதனை

பெருநிறுவன மோசடிக் குற்றச்சாட்டு / வர்த்தகர் விக்டர் சின்க்குச் சொந்தமான பல இடங்களில் போலீசார் அதிரடிச் சோதனை

ஈப்போவில் கேபிள் திருட்டில் ஈடுபட்ட மூவர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு

ஈப்போவில் கேபிள் திருட்டில் ஈடுபட்ட மூவர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு