Oct 17, 2026
Thisaigal NewsYouTube

சிலாங்கூர் சுற்றுலா ஆண்டு : 60 லட்சம் வருகையாளர்கள் GM Klang- கின் இலக்கு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
சிலாங்கூர் சுற்றுலா ஆண்டு : 60 லட்சம் வருகையாளர்கள் GM Klang- கின் இலக்கு

கிள்ளான், நவ.13-


2025 ஆம் ஆண்டு சிலாங்கூருக்கு வருகை தாருங்கள், சுற்றுலா ஆண்டு பிரச்சாரத்தின் போது, ஓரிட மொத்த விற்பனை மையமான GM Klang-கிற்கு வருகை தந்து, பொருட்களை வாங்கக்கூடிய வருகையாளர்களின் எண்ணிக்கை 60 லட்சம் பேராக GM Klang இலக்கு கொண்டு இருப்பதாக அதன் நிர்வாக இயக்கநர் டத்தோ லிம் செங் கொக் தெரிவித்தார்.

சிலாங்கூர் சுற்றுலா ஆண்டு பிரச்சாரத்திற்கு மெருகுசேர்க்கும் வகையில் பலதரப்பட்ட பிரச்சாரங்களை GM Klang முன்னெடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். சமூக வலைத்தளங்களில் வாயிலாக மேற்கொள்ளும் பிரச்சாரமும் இதில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இந்தப் பிரச்சாரங்கள் யாவும் இம்மாதம் முதல் அமல்படுத்தப்படும். சிலாங்கூருக்கு மட்டுமின்றி GM Klang, ஓரிட வர்த்தக மையத்திற்கும் அதிகமான உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுப்பயணிகள் வருகை தருவதற்கு ஏதுவாக மிகுந்த கவன ஈர்ப்பு நடவடிக்கையை GM Klang மேற்கொள்ளும் என்று டத்தோ லிம் செங் கொக் தெரிவித்தார்.

சிலாங்கூர் மாநில அரசின் 2025 ஆம் ஆண்டுக்கான சுற்றுலா ஆண்டின் நோக்கத்திற்கு ஏற்ப GM Klang பலதரப்பட்ட பிரத்தியேக பிரச்சாரங்களை முன்னெடுத்துள்ள பிரச்சாரத்தின் தொடக்கவிழா, நேற்று GM Klang- மொத்த வியாபார மையத்தின் கீழ் தளத்தில் ஆட்ரியம் அரங்கில் நடைபெற்றது.

இதனை சிலாங்கூர் மாநில ஊராட்சிமன்ற மற்றும் சுற்றுலா ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ இங் சூயி லிம் அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார். இந்நிகழ்வில் உரையாற்றிய டத்தோ லிம் செங் கொக் மேற்கண்ட விவரங்களை தெரிவித்தார்.

மலேசியாவிலேயே மிகப்பெரிய மொத்த வியாபார மையமாக GM Klang, மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றதன் வழி கிடைக்கப்பெற்ற அங்கீகாரம் / மற்றும் கிள்ளான் அரச மாநகர் மன்றத்தினால் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் கிள்ளான் மாநகர சுற்றுலாத் தூதராக GM Klang நியமிக்கப்பட்டு இருப்பது, / GM Klang- கிற்கு அதிகமான சுற்றுப்பயணிகள் வருகைப்புரிவர் என்ற புதிய நம்பிக்கையையும், உத்வேகத்தையும் ஏற்படுத்தியுள்ளதாக டத்தோ லிம் செங் கொக் குறிப்பிட்டார்.

தவிர எதிர்காலத்தில் தென்கிழக்காசியாவிலேயே எல்லா வகையான அனைத்துப் பொருட்களும் ஒரே இடத்தில் கிடைக்கக்கூடிய ஒரு முழுமைப்பெற்ற ஓரிட வர்த்தக மையமாக GM Klang- கை உருவாக்கும் தங்களின் தூர நோக்கு லட்சியம் நிறைவேறுவதற்கு அதிகமான சுற்றுப்பயணிகள் GM Klang- கிற்கு வருகை புரிவர் என்று டத்தோ லிம் செங் கொக் நம்பிக்கைத் தெரிவித்தார்

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →