Sep 28, 2026
Thisaigal NewsYouTube
உலகப் பொருளாதார நெருக்கடி:  இந்திய முஸ்லிம்  உணவகங்களின் செலவுகள் 30% வரை உயர்வு
தற்போதைய செய்திகள்

உலகப் பொருளாதார நெருக்கடி: இந்திய முஸ்லிம் உணவகங்களின் செலவுகள் 30% வரை உயர்வு

Share:

நாட்டில் நிலவும் உலகளாவிய பொருளாதார அழுத்தம் காரணமாக, இந்திய முஸ்லிம் உணவகங்களின் செயல்பாட்டுச் செலவுகள் 10 விழுக்காடு முதல் 30 விழுக்காடு வரை அதிகரித்துள்ளதாக மலேசிய முஸ்லிம் உணவக உரிமையாளர்கள் சங்கமான Presma தெரிவித்துள்ளது.

பொருட்களின் விநியோகச் சங்கிலியில் ஏற்பட்டுள்ள தடைகள், போக்குவரத்துச் செலவு அதிகரிப்பு மற்றும் ஈரான் போர் போன்ற உலகளாவிய அரசியல் பதற்றங்களே இந்த விலையேற்றத்திற்குக் காரணம் என சங்கத்தின் தலைவர் மோசின் அப்துல் ரசாக் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக கோழி இறைச்சி, காய்கறிகள், சமையல் எரிவாயு மற்றும் பேக்கேஜிங் பொருட்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது.

இருப்பினும், வாடிக்கையாளர்களுக்குப் சுமை கொடுக்காமல் இருக்க பெரும்பாலான உணவக உரிமையாளர்கள் தற்போதைய விலையிலேயே உணவுகளை வழங்க முயற்சி செய்து வருகின்றனர்.

ஆனால், இந்த விலை உயர்வு நீடித்தால் உணவுகளின் விலையில் சிறிய மாற்றங்களைச் செய்வது தவிர்க்க முடியாதது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related News

டாக்டர் சித்தி ஹஸ்மாவின் உடல் இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது… ஐஜேஎன்னில் சோகமான சூழல்

டாக்டர் சித்தி ஹஸ்மாவின் உடல் இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது… ஐஜேஎன்னில் சோகமான சூழல்

டாக்டர் சித்தி ஹஸ்மா மறைவு நாட்டிற்கு பேரிழப்பு - பிரதமர் அன்வார் இரங்கல்

டாக்டர் சித்தி ஹஸ்மா மறைவு நாட்டிற்கு பேரிழப்பு - பிரதமர் அன்வார் இரங்கல்

100 ஆண்டுகால வாழ்க்கைப் பயணம், எண்ணற்ற சமூக சேவைகள்: விடைபெற்றார் மலேசியாவின் முன்னோடி பெண் மருத்துவர் டாக்டர் சித்தி ஹஸ்மா

100 ஆண்டுகால வாழ்க்கைப் பயணம், எண்ணற்ற சமூக சேவைகள்: விடைபெற்றார் மலேசியாவின் முன்னோடி பெண் மருத்துவர் டாக்டர் சித்தி ஹஸ்மா

காப்பாரில் அதிகாலை தீ விபத்து – 3 வாகனங்கள் சேதம்

காப்பாரில் அதிகாலை தீ விபத்து – 3 வாகனங்கள் சேதம்

செராஸ் போலீஸ் நிலையத்தில் அதிகாரியை கத்தியால் குத்த முயன்ற நபரால் பரபரப்பு

செராஸ் போலீஸ் நிலையத்தில் அதிகாரியை கத்தியால் குத்த முயன்ற நபரால் பரபரப்பு

"என் 12 வயது மகனுக்கு ஏன் இவ்வளவு மன அழுத்தம் கொடுக்கிறீர்கள்?" - எஸ்பிஆர்எம் உத்தரவிற்கு  எம்.சரவணன் விமர்சனம்

"என் 12 வயது மகனுக்கு ஏன் இவ்வளவு மன அழுத்தம் கொடுக்கிறீர்கள்?" - எஸ்பிஆர்எம் உத்தரவிற்கு எம்.சரவணன் விமர்சனம்