Jul 28, 2026
Thisaigal NewsYouTube
கல்வி அமைச்சு தொடர்ந்து விசாரணை செய்து வருகிறது
தற்போதைய செய்திகள்

கல்வி அமைச்சு தொடர்ந்து விசாரணை செய்து வருகிறது

Share:

சிலாங்கூர், அம்பாங்கில் உள்ள ஓர் தேசிய தொடக்கப்பள்ளியில் 11 வயது ஓர் இந்திய மாணவனுக்கு தண்டனை அளிக்கும் விதமாக கொளுத்தும் வெயிலில் சுமார் 3 மணி நேரம் நிற்க வைக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் குறித்து கல்வி அமைச்சு விசாரணை செய்து வருவதாக அதன் அமைச்சர் ஃபத்லினா சிடெக் தெரிவித்துள்ளார்

தற்போது உடல் ரீதியாக பாதிக்கப்பட்டு, வலிப்பு நோய்க்கு ஆளாகியுள்ளதாக கூறப்படும் அந்த மாணவன் தொடர்புடைய அறிக்கையை கல்வி அமைச்சு பெற்று இருப்பதாகவும் தற்போது விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் ஃபத்லினா சிடெக் குறிப்பிட்டார்.

சம்பந்தப்பட்ட பள்ளியின் மாணவர்கள் பாதுகாப்பு விவகாரத்தில் கல்வி அமைச்சு ஒரு போதும் விட்டுக்கொடுக்கும் போக்கு கடைப்பிடிக்கப்படாது என்றும் விசாரணையை அடிப்படையாக கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் உறுதி அளித்துள்ளார்.

Related News