சாலைகளில் அராஜகம் புரியும் கேடிகளுக்கு எதிராக கூலிம் மாவட்ட போக்குவரத்து போலீசார், நடத்திய "Ops Samseng" எனும் சோதனை நடவடிக்கையில் 53 போக்குவரத்து குற்றவியல் சம்மன்கள் வெளியிடப்பட்டதாக கூலிம் மாவட்ட போலீஸ் தலைவர் Superintendan Mohd Redzuan Salleh
தெரிவித்தார். இந்நடவடிக்கையில் 63 வாகனமோட்டிகளிடம் சோதனை நடத்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
சாலை போக்குவரத்து தொடர்பில் அதிகமான குற்றவியல் சம்பவங்கள் நிகழும் பகுதியாக அடையாளம் காணப்பட்ட BKE எனும் பட்டர்வொர்த் - கூலிம் விரைவு நெடுஞ்சாலையில் இச்சோதனை நடத்தப்பட்டது.
சாலை விதிமுறைகளை பின்பற்றாத மோட்டார் சைக்கிளோட்டிகள், Mat Rempit ஓட்டுநர்கள் ஆகியோர் இச்சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக Mohd Redzuan தெரிவித்தார்.
இச்சோதனை நடவடிக்கையில் பல்வேறு குற்றங்களை புரிந்த 23 பேரின் மோட்டார் சைக்கிள் கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.








