Dec 3, 2025
Thisaigal NewsYouTube
மோட்டார் சைக்கிளோட்டி பலி
தற்போதைய செய்திகள்

மோட்டார் சைக்கிளோட்டி பலி

Share:

மோட்டார் சைக்கிளோட்டி ஒருவர் வேக கட்டுப்பாட்டை இழந்து, சாலைத்தடுப்பில் மோதி கீழே விழுந்து மரணமுற்றார்.

இச்சம்பவம் இன்று காலை 6.45 மணியளவில் எல்.பி.தி1 கிழக்குக்கரை நெடுஞ்சாலையின் 211.2 இரண்டாவது கிலோமீட்டரில் குவந்தானுக்கு அருகில் நிகழ்ந்தது.

சிலாங்கூர், காப்பாரைச் சேர்ந்த அகமட் எமிர் டேனியல் அகமட் அம்டான் என்ற 22 வயதுடைய இளைஞர் இச்சம்பவத்தில் மாண்டதாக போலீசார் அடையாளம் கூறினர்.

தமது Yamaha 125 ரக மோட்டார் சைக்கிளில் காப்பாரில் இருந்து கோலத்திரங்கானுவிற்கு அந்த இளைஞர் பயணம் செய்த பொழுது இவ்விபத்து நிகழ்ந்ததாக குவாந்தான் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி வான் முஹம்மது ஜஹாரி வான் புசு தெரிவித்தார்.

Related News