Jul 27, 2026
Thisaigal NewsYouTube
சாலை விபத்தில் ஓய்வு பெற்ற இராணுவ வீரர் உயிரிழந்தார்
தற்போதைய செய்திகள்

சாலை விபத்தில் ஓய்வு பெற்ற இராணுவ வீரர் உயிரிழந்தார்

Share:

நெகிரி செம்பிலான், ஏப்ரல் 30-

நெகிரி செம்பிலான், சிரம்பானில் 5 வாகனங்களை உட்படுத்திய சாலை விபத்தில், ஓய்வுபெற்ற இராணுவ வீரர் ஒருவர் லோரி மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

நேற்று மாலை 5.55 மணியளவில் ஜாலான் சிரம்பான்- தம்பின் சாலையில், 74 வயதுடைய அம்முதியவர் செலுத்திய புரோட்டான் வீரா வாகனம் பழுதானதால், அவர் வாகனத்திற்கு வெளியே நின்றுக்கொண்டிருந்தார்.

அம்முதியவருக்கு உதவி செய்வதற்காக மோட்டார்சைக்கிளொட்டி ஒருவர் அங்கு நின்ற போது, ஹூண்டாய் கெட்ஸ் ரக காரில் வந்த ஆடவர், புரோட்டான் வீரா வாகனத்தை மோதியுள்ளார்.

அதன் பின்னர், ஹினோ ரகலோரி ஓட்டுநர் சாலையின் வலது பக்கம் தனது லோரியை செலுத்த முற்பட்ட போது, தொழிலாளர்களை ஏற்றி வந்த பேருந்து ஒன்று, அந்த லோரியை பின்னாலிருந்து மோதியதாக, சிரம்பான் மாவட்ட போலீஸ் தலைவர் அசிஸ்டன்ட் கமிஷனர் முகமட் ஹட்டா சே தின் தெரிவித்தார்.

முன்னே நகர்ந்து சென்ற ஹினோ ரக லோரி, புரோட்டான் வீரா-வையும் அதன் ஓட்டுநரையும் மோதியதால் அவர் கடுமையான காயங்களுக்கு இலக்கானார். அந்த விபத்தில் சிக்கிய எஞ்சிய அனைவரும் பலத்த காயமின்றி உயிர் தப்பியதாக அவர் கூறினார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்