கோலாலம்பூர், ஜூன் 04-
உலகின் தலைச்சிறந்த 100 பல்கலைக்கழகங்களில், மலேசியாவைச் சேர்ந்த மலாயாப் பல்கலைக்கழகம் 60ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
QUACQUARELLI SYMONDS QS ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள 2025ஆம் ஆண்டுக்கான அனைத்துலக பல்கலைக்கழக தர வரிசையில் அந்த தரவு வெளியிடப்பட்டுள்ளது.
கடந்தாண்டு அதே ஆய்வில் மலாயாப் பல்கலைக்கழகம் 65ஆவது இடத்தில் இருந்தது.
வேலை வாய்ப்புகள், கல்வி புலங்களின் அதிகரிப்பு, அனைத்துலக மாணவர்களின் எண்ணிக்கையில் உயர்வு ஆகியவற்றின் அடிப்படையில், மலாயாப் பல்கலைக்கழகம் அந்த உயர்வை பெற்றுள்ளது.
சம்பந்தப்பட்ட தரவில், மலேசியாவைச் சேர்ந்த 28 உயர்க்கல்வி கழகங்கள் உயரிய நிலையைப் பெற்றுள்ளன.








