May 22, 2026
Thisaigal NewsYouTube
பக்கவாட்டு கண்ணாடி, வாகன விளக்குகளை சேதப்படுத்தியதாக நபர் மீது குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

பக்கவாட்டு கண்ணாடி, வாகன விளக்குகளை சேதப்படுத்தியதாக நபர் மீது குற்றச்சாட்டு

Share:

பினாங்கு, ஜூன் 12-

நபர் ஒருவரின் கார் விளக்குகளையும் பக்கவாட்டு கண்ணாடியையும் உடைத்து சேதப்படுத்தியதாக மீ கோரெங் உணவக வியாபாரியின் உதவியாளர் ஒருவர் ஜார்ஜ்டவுன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றச்சாட்டப்பட்டார்.

46 வயது முகமது சப்ரி மைதீன் பிள்ளை என்ற அந்த உணவக வியாபாரியின் உதவியாளர் மாஜிஸ்திரேட் நத்ரதுன் நைம் முகமது சைதி முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்ட போது அக்குற்றத்தை அவர் ஒப்புக் கொள்ளவில்லை.

குற்றம் என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 7 ஆண்டுகள் சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டுமே விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 506 ஆவது பிரிவின் கீழ் அவர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

கடந்த ஜூன் 8 ஆம் தேதி பிற்பகல் 2.50 மணியளவில் பினாங்கு, ஜாலான் சுங்கை பினாங்கிலிருந்து ஜாலான் பதானி -வரையில் இக்குற்றத்தை புரிந்திருப்பதாக அவர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

Related News