May 22, 2026
Thisaigal NewsYouTube
8 இடங்களில் அதிக வெப்பநிலை எச்சரிக்கை
தற்போதைய செய்திகள்

8 இடங்களில் அதிக வெப்பநிலை எச்சரிக்கை

Share:

கோலாலம்பூர், மார்ச் 14 -

தீபகற்ப மலேசியாவின் வடக்கு பகுதியிலுள்ள 8 இடங்களில் அதிகமான வெப்பநிலை எச்சரிக்கையை மலேசிய வானிலை ஆய்வுத்துறை வெளியிட்டுள்ளது.

பாடாங் தெராப், கோத்தா செத்தார், போக்கோக் செனா, பென்டாங் சிக், பாலிங், உலு பேராக் உட்பட பெர்லிஸ் ஆகிய பகுதிகள் இதில் உள்ளடங்குவதாக மெட் மலேசியா தெரிவித்துள்ளது.

ஒரு பகுதியில் தொடர்ச்சியாக மூன்று நாட்களுக்கு வெப்பநிலை 35 முதல் 37 டிகிரி செல்சியஸ் வரையில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Related News