தோட்ட நிர்வாகம் சார்பில் அதன் அதிகாரிகளுடன் சம்பளப் பணத்தை எடுப்பதற்கு பாதுகாப்பு வழங்குவதற்காக வங்கிற்கு வந்திருந்த தோட்ட உதவி போலீஸ்காரரின் துப்பாக்கியிலிருந்து தற்செயலாக வெளியேறிய துப்பாக்கி குண்டுகள் வங்கியில் இருந்த மூவரை காயப்படுத்தின.
இச்சம்பவம் இன்று பிற்பகல் 12.55 மணியளவில் மலாக்கா ஜாசினில் உள்ள ஒரு வங்கியில் நிகழ்ந்தது. இதில் வங்கியில் இருந்த 26 மற்றும் 46 வயதுடைய இரண்டு பெண் வாடிக்கையாளர்கள் மற்றும் 26 வயதுடைய வங்கியின் பாதுகாவளர் காயமடைந்தனர் என்று ஜாசின் மாவட்ட போலீஸ் துணைத்தலைவர் அகமட் ஜமில் ராட்ஷி தெரிவித்தார்.
மூவரும் சிறுகாயங்களுடன் உயிர் தப்பியதாக குறிப்பிட்ட அகமட் ஜமில், அந்த உதவி போலீஸ்காரர் வைத்திருந்த பம்கன் துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டதாக குறிப்பிட்டார்.
இச்சம்பவத்தில் கவனக்குறைவு நிகழ்ந்திருப்பதாக கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து அந்த உதவி போலீஸ்காரரும் கைது செய்யப்பட்டுள்ளதாக ஜமில் கூறினார்.

Related News

பந்தை எடுக்கும் முயற்சியில் கால் இடறி கீழே விழுந்து ஆடவர் மரணம்

சுங்கை ரொம்பின் ஆற்றில் கணவன் மனைவி இறந்து கிடந்தனர்

முதியவர் மாடி வீட்டிலிருந்து கீழே விழுந்து மரணம்

ஓரினப்புணர்ச்சி நடவடிக்கை: போலீசார் விதிமுறையை மீறவில்லை

பெட்ரோல் ரோன் 97, 3 காசு உயர்வு


