May 21, 2026
Thisaigal NewsYouTube
ஹீரோ போல காப்பாற்றிய தீயணைப்பு வீரர்
தற்போதைய செய்திகள்

ஹீரோ போல காப்பாற்றிய தீயணைப்பு வீரர்

Share:

மலாக்கா, பன்டா ஹீலீரில் உள்ள ஓர் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்தில் சிக்கிய மூதாட்டியை ஹீரோ போல தீயணைப்பு வீரர்கள் விரைந்து செயல்பட்டு காப்பாற்றினர்.

இன்று நள்ளிரவு 12:30 மணியளவில் நடந்த இச்சம்பவத்தில் 83 வயதுடைய வயோதிகரின் கையில் தீக்காயம் ஏற்பட்டது.

பாதிக்கப்பட்ட முதியவர் தீயிலிருந்து மீட்கப்பட்டு அவசர சிகிச்சைக்காக மலாக்கா மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸில் அனுப்பி வைக்கபட்டதாக தீயணைப்பு துணைத்தலைவர் யாசிட் முஹமாட் தாஹிர் தெரிவித்தார்.

நள்ளிரவு 12.50 மணியளவில் பொதுமக்களிடமிருந்து கிடைக்க பெற்ற அவசர அழைப்பினை தொடர்ந்து அவ்விடத்திற்கு விரைந்ததாக யாசிட் முஹாமாட் கூறினார்.

நள்ளிரவு 2.45 மணியளவில் தீ முழுமையாக அணைக்கபட்டதாக ஓர் அறிக்கையில் யாசிட் முஹாமாட் விவரித்தார்.

Related News