Jul 28, 2026
Thisaigal NewsYouTube
இரண்டு மூத்த அதிகாரிகள் உட்பட மூன்று போலீஸ்காரர்கள் கைது
தற்போதைய செய்திகள்

இரண்டு மூத்த அதிகாரிகள் உட்பட மூன்று போலீஸ்காரர்கள் கைது

Share:

அலோர் காஜாவில் இரண்டு மூத்த அதிகாரிகள் உட்பட மூன்று போலீஸ்காரர்கள் கெத்தும் இலையை வைத்திருப்பதாக சந்தேகித்து கைது செய்யப்பட்டிருப்பதாக தெரியவந்துள்ளது.

நேற்று திங்கட்கிழமை இரவு 11:30 மணியளவில் புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் நேர்மை மற்றும் நிலையாணைப் பிரிவினரால் அந்நபர்கள் கைது செய்யப்பட்டதாக மலாக்கா போலீஸ் துணைத்தலைவர் டத்தோ ஜைனோல் சமா கூறினார்.

31 க்கும் 55 க்கும் உட்பட்ட வயதுடைய அந்நபர்கள் அலோர் காஜாவில் உள்ள ஓர் வீட்டில் கைது செய்யபட்டிருப்பதாக ஜைனோல் சமா குறிப்பிட்டார்.

இச்சோதனையில் கெத்தும் இலைகள், கெத்தும் அடங்கிய போத்தல்கள், போலீஸ் சீருடைகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டதாக அவர் அறிவித்தார்.

விசாரணைக்காக கைது செய்யப்பட்ட போலீஸ் அதிகாரிகள் இன்று தடுப்பு காவலில் வைக்கப்படுவார்கள் என்று ஜைனோல் சமா தெரிவித்தார்.

Related News