Mar 16, 2026
Thisaigal NewsYouTube
அமைச்சர் Dr Zaliha கருத்துரைக்க மறுத்து விட்டார்.
தற்போதைய செய்திகள்

அமைச்சர் Dr Zaliha கருத்துரைக்க மறுத்து விட்டார்.

Share:

முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கிற்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதா? இல்லையா? என்பது குறித்து பிரதமர் துறை அமைச்சர் Dr. Zaliha Mustafa கருத்துரைக்க மறுத்து விட்டார்.

பொது மன்னனிப்பு வாரியத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக காத்திருக்குமாறு பொது மக்களை அவர் கேட்டுக்கொண்டார்.

நஜீப்பிற்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படும் செய்தி, இன்று பிற்பகலில் சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டதைத் தொடர்ந்து அந்த செய்தி உண்மை அல்ல என்று ஊடகங்கள் பின்னர் தெளிவுபடுத்தின.

எனினும் இவ்விவகாரம் தொடர்பில் தம்மால் எதுவும் கருத்தரைக்க இயலாது என்று பொது மன்னிப்பு வாரியத்தின் ஓர் உறுப்பினரான Dr. Zaliha Mustafa தெரிவித்தார்.

Related News