May 22, 2026
Thisaigal NewsYouTube
42 ஆயிரம் வழக்குப் பொருட்கள் அழிக்கப்பட்டன
தற்போதைய செய்திகள்

42 ஆயிரம் வழக்குப் பொருட்கள் அழிக்கப்பட்டன

Share:

கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் கடந்த ஆண்டு வரை 429 விசாரணை அறிக்கைகள் சம்பந்தப்பட்ட 42 ஆயிரத்து 408 சாட்சிப்பொருட்கள் அழிக்கப்பட்டுள்ளதாக கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ அல்லாவுடீன் அப்துல் மஜீட் தெரிவித்துள்ளார்.

அழிக்கப்பட்ட சாட்சியப் பொருட்களின் மொத்த மதிப்பு 29 லட்சத்து 80 ஆயிரம் வெள்ளியாகும். Bitcoin இயந்திரங்கள, மதுபான வகைகள், சிகரெட், பட்டாசுகள், கைப்பேசிகள் ஆகியவை அழிக்கப்பட்ட பொருட்களில் அடங்கும் என்று டத்தோ அல்லாவுடீன் குறிப்பிட்டார்.

429 வழக்குகளும் தீர்க்கப்பட்டு விட்டதால் நீதிமன்ற உத்தரவுக்கு பின்னர் அப்பொருட்கள் அழிக்கப்பட்டுள்ளதாக இன்று கோலாலம்பூர்ஆமான் டாமாய் போலீஸ் நிலையத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் டத்தோ அல்லாவுடீன் இதனை தெரிவித்தார்.

Related News