கடந்த சனிக்கிழமை அன்று , மலேசியாவை காப்பாற்றுங்கள் என்ற கருப் பொருளை ஏந்தி நடைபெற்ற அமைதி போராட்டம் குறித்து நாளுக்கு நாள் எதிர்ப்பு அலைகள் உருவாகி கொண்டிருக்கும் நிலையில், சரவாக் மாநில பிகேஆர் இளைஞர் பிரிவு தலைவர் Chew Choon Man பேரணி ஏற்பாட்டாளர்களை கடுமையாக சாடுயுள்ளார்.
மலேசிய தின நாள் கொண்டாடுவதாக கூறி, நாட்டின் ஒற்றுமையை குலைக்கும் வகையாக பெரிக்கத்தான் நெசனல் இளைஞர் பிரிவு இவ்வாறான பேரணியை ஏற்பாடு செய்திருப்பது கண்டிக்கத்தக்கது என சியூ தெரிவித்தார்.
பேரணி நடத்துவதும் அதில் கலந்து கொள்வது குடிமக்களின் உரிமையாக இருந்தாலும், மலேசிய தின நாள் கொண்டாட்டத்தின் போது பேரணியை நடத்துவது நாட்டை இழிவு படுத்தும் செயல் என அவர் மேலும் கூறினார்.








