Jul 28, 2026
Thisaigal NewsYouTube
மேலவைத் தலைவர் முத்தாங் தாகல் உடல்நிலை கவலைக்கிடம்
தற்போதைய செய்திகள்

மேலவைத் தலைவர் முத்தாங் தாகல் உடல்நிலை கவலைக்கிடம்

Share:

கோலாலம்பூர், மே 08-

நாடாளுமன்ற மேலவைத் தலைவர் டத்தோ முத்தாங் தாகல் உடல் நிலை, கவலைக்கிடமான சூழ்நிலையில் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கோலாலம்பூர் இருதய சிகிச்சை கழகமான IJN-னில் தற்போது அனுமதிக்கப்பட்டு இருக்கும் முத்தாங் தாகல் உடல் நிலை ஆபத்தான சூழ்நிலையில் இருப்பதாக அவரின் குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர் என்று சரவா துணை முதலமைச்சர் கெராவத் காலா தெரிவித்துள்ளார்.

தமது அலுவல் பயணத்தை தொடர முடியாமல் அஜர்பைஜான்- நாட்டிலிருந்து கோலாலம்பூருக்கு திரும்பி விட்ட முத்தாங் தாகல், -லின் உடல் நிலை குறித்து அவரின் குடும்ப உறுப்பினர்கள் தம்மிடம் தெரிவித்து இருப்பதாக கெராவத் காலா குறிப்பிட்டார்

தம்முடன் அடிக்கடி கோல்ப் விளையாடிய முத்தாங் தாகல், மிக ஆரோக்கியமாக இருக்கிறார் என்று தாம் கருதி வந்த நிலையில் அவர் கடும் இருதயக் கோளாற்றுக்கு ஆளாகியிருப்பது தம்மை அதிர்ச்சி அடைய செய்துள்ளதாக கெராவத் காலா தெரிவித்துள்ளார்.

மலேசிய வரலாற்றில் டாயாக் பூர்வக்குடி இனம் மற்றும் சரவா மாநிலத்தைச் சேர்ந்த முதலாவது மேலவைத் தலைவர் என்ற பெருமையையும் சரவா, GPS கட்சியைச் சேர்ந்த 69 வயதுடைய முத்தாங் தாகல் பெறுகிறார்.

இவ்வாண்டு பிப்ரவரி 15 ஆம் தேதி சரவா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்ட முன்னாள் மேலவைத் தலைவர் டாக்டர் வான் ஜுனாடி துவாங்கு ஜாபர்-க்கு பதிலாக புதிய மேலவைத் தலைவராக முத்தாங் தாகல் நியமிக்கப்பட்டார்.

Related News

சுங்கை பட்டாணியில் மர ஆலைக்கு வெடிகுண்டு மிரட்டல் - போலீஸ் விசாரணை

சுங்கை பட்டாணியில் மர ஆலைக்கு வெடிகுண்டு மிரட்டல் - போலீஸ் விசாரணை

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்