May 22, 2026
Thisaigal NewsYouTube
கழிப்பறைக்கு பெண்ணை பின்தொடர்ந்து சென்ற நபருக்கு 5 மாத சிறை
தற்போதைய செய்திகள்

கழிப்பறைக்கு பெண்ணை பின்தொடர்ந்து சென்ற நபருக்கு 5 மாத சிறை

Share:

ஒரு பேரங்காடியில் உள்ள பொது கழிப்பறைக்கு பெண் ஒருவரை பின்தொடர்ந்து சென்ற குற்றத்திற்காக இளைஞன் ஒருவனுக்கு ஐந்து மாதம் சிறைத்தண்டனை விதிக்க Batu Pahat மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

24 வயது Shee Ah Lai என்ற அந்த இளைஞன் மாஜிஸ்திரேட் Suhaila Shafi'uddin முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றத்தை ஒப்புக் கொண்டதை அடுத்து இத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

குற்றம் என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் ஐந்து ஆண்டுகள் சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டுமே விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 509 ஆவது பிரிவின் கீழ் அவர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

கடந்த ஜூன் 13 ஆம் தேதி பிற்பகல் 12.30 மணியளவில் Johor, Batu Pahat - டில் Jalan Flora Utama - வில் உள்ள ஒரு Shopping Mall பேரங்காடியில் இக்குற்றத்தை புரிந்ததாக அவர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

Related News