Oct 10, 2026
Thisaigal NewsYouTube

நிலுவைத் தொகை 12.5 மில்லியன் ரிங்கிட்டாக அதிகரித்துள்ளது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
நிலுவைத் தொகை 12.5 மில்லியன் ரிங்கிட்டாக அதிகரித்துள்ளது

ஜார்ஜ்டவுன், ஜூன்.15-

ஜூன் 1 ஆம் தேதி நிலவரப்படி, பினாங்கு மாநிலத்தில் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அடுக்குமாடி அலகுகளுக்கான வரி நிலுவைத் தொகை 12.5 மில்லியன் ரிங்கிட்டாக அதிகரித்துள்ளதாக பினாங்கு நிலம், தாதுப் பொருட்கள் துறையின் இயக்குநர் டாக்டர் ஃபைஸால் கமாருடின் தெரிவித்தார்.

இந்த நிலுவைகளில் பெரும்பாலானவை 2019 ஆம் ஆண்டு முதல் நிலுவையில் உள்ளவை. நிலுவைத் தொகையை உடனடியாகச் செலுத்தத் தவறினால், 1985 ஆம் ஆண்டு அடுக்குமாடி உரிமைச் சட்டத்தின் கீழ் நோட்டீஸ் வழங்கப்படும் என்றும், மூன்று மாதங்களுக்குள் பணம் செலுத்தப்படாவிட்டால், பறிமுதல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →