Jul 28, 2026
Thisaigal NewsYouTube
கார்கள் அடித்து நொறுக்கப்பட்ட சம்பவம், 28 ஆடவர்கள் கைது
தற்போதைய செய்திகள்

கார்கள் அடித்து நொறுக்கப்பட்ட சம்பவம், 28 ஆடவர்கள் கைது

Share:

பினாங்கு, மே 04-

பினாங்கு, பட்டர்வொர்த், ஜாலன் ராஜா உடா-வில் வெட்டுக்கத்தியை ஆயுதமாக தாங்கிய கும்பல் ஒன்று கார்களை அடித்து நொறுக்கி, கலவரத்தில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பில் போலீசார் இதுவரையில் 28 பேரை கைது செய்துள்ளனர்.

சம்பந்தப்பட்ட கும்பல், திரைப்படங்களில் வருவதைப் போன்று பாராங்கை ஏந்திக்கொண்டு கார்களை அடித்து நொறுக்கும் காட்சியைக் கொண்ட காணொளி ஒன்று நேற்று சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டதைத் தொடர்ந்து இக்கலவரத்தில் ஈடுபட்டதாக நம்பப்படும் 28 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று செபராங் பெராய் உத்தாரா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முகமது அஸ்ரி ஷாபி தெரிவித்துள்ளார்.

17 க்கும் 51 க்கும் இடைப்பட்ட வயதுடைய அந்த 28 பேரும் இன்று அதிகாலையில் செபராங் பிறை உத்தாராவில் பல்வேறு பகுதிகளில் கைது செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இரு கும்பல்களுக்கு இடையில் ஆத்திரமூட்டும் செயலினால் இந்த தாக்குதல் நடந்துள்ளதாக பூர்வாங்க விசாரணையில் தெரியவந்துள்ளது என்று ஏசிபி முகமது அஸ்ரி தெரிவித்துள்ளார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்