சமுக வலைத்தளத்தில் மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான், சுல்தான் ஷரஃபுடின் இட்ரிஸ் ஷா வை அவமதித்ததாக கூறப்படும் ஆடவர் ஒருவரை போலீசார் விசாரணை செய்து வருவதாக புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் குற்றப்புலனாய்வுத்துறை இயக்குநர் டத்தோ செரி முஹமாட் சஷுஹைலி முஹமாட் சயின் தெரிவித்துள்ளார். கடந்த ஆகஸ்ட் 28 ஆம் தேதி தமது முகநூலில் பதிவேற்றம் செய்யப்பட்ட ஓர் இடுகையில் சிலாங்கூர் சுல்தானுக்கு விசுவாசம் இல்லாததைப் போல ஓர் உணர்வை ஏற்படுத்தியதாக அந்த ஆடவருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்டுள்ளன என்று முஹமாட் சஷுஹைலி குறிப்பிட்டார்.
சம்பந்தப்பட்ட நபர் 1948 ஆம் ஆண்டு தேச நிந்தனை சட்டம் மற்றும் 1998 ஆம் ஆண்டு தொடர்பு, பல்லூடகச் சட்டம் ஆகியவற்றின் கீழ் விசாரணை செய்யப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

பந்தை எடுக்கும் முயற்சியில் கால் இடறி கீழே விழுந்து ஆடவர் மரணம்

சுங்கை ரொம்பின் ஆற்றில் கணவன் மனைவி இறந்து கிடந்தனர்

முதியவர் மாடி வீட்டிலிருந்து கீழே விழுந்து மரணம்

ஓரினப்புணர்ச்சி நடவடிக்கை: போலீசார் விதிமுறையை மீறவில்லை

பெட்ரோல் ரோன் 97, 3 காசு உயர்வு


