ஜோகூர், பூலாய் நாடாளுமன்றத் தொகுதி மற்றும் சிம்பாங் ஜெராம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல்கள் நாளை செப்டம்ப்ர் 9 ஆம் தேதி நடைபெறும் வேளையில், இரு தேர்தல்களும் சுமூகமாக நடைபெறுவதை உறுதி செய்வதற்கு சுமார் 4 ஆயிரம் போலீஸ்காரர்கள் கடமையில் ஈடுபடுவர்.
அனைத்து வாக்குச் சாவடிகளையும் கண்காணிப்பது, பாதுகாப்பு நடவடிக்கைகளை உறுதிப்படுத்துவது உட்பட பாதுகாப்பு தொடர்புடைய அனைத்துப் பணிகளையும் ஏற்கும் வகையில் 4 ஆயிரத்திற்கு மேற்பட்ட போலீஸ்காரர்கள் பணிக்கு அமர்த்தப்படுவர் என்று ஜோகூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ கமருஸாமான் மாமாட் தெரிவித்தார்.








