Mar 16, 2026
Thisaigal NewsYouTube
தொழுநோய் 40 சதவீதம் அதிகரிப்பு
தற்போதைய செய்திகள்

தொழுநோய் 40 சதவீதம் அதிகரிப்பு

Share:

நாட்டில் தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 40 சதவீதம் அதிகரித்துள்ளது.

இவை கடந்த ஆண்டு 183 ஆக மட்டுமே இருந்த வேளையில் இவ்வாண்டு 256 ஆக உயர்ந்து காணப்படுகின்றது.

இந்நோய் குறித்து கண்டறிந்து அதனை கண்காணிப்பதற்கான நடவடிக்கைகளை வழுப்படுத்தியதை தொடர்ந்து இவை அதிகரித்துள்ளதாக உலக தொழுநோய் தினத்தன்று சுகாதார அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் டிசுல்கிஃப்லி அஹ்மாட் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

2030 ஆம் ஆண்டிற்குள் உள்நாட்டில் எந்தவொரு தொழுநோயாளிகள் இல்லாத இலக்கை அடைய உலக சுகாதார அமைப்பின் (WHO) பரிந்துரைகளுக்கு இணங்க இந்த செயல்பாடுகளை வழுப்படுத்துவதாக அறியப்படுகிறது.

தொழுநோயால் பாதிக்கப்படுபவர்களை முன்கூட்டியே கண்டறிவது, மேலும் இந்நோய் பரவாமல் இருப்பதை கட்டுப்படுத்தப்படுவதாக டிசுல்கிஃப்லி அஹ்மாட்கூறினார்.

தொழுநோய் குறித்து ஏதேனும் அறிகுறிகள் தெரிந்தால் உடனடி சிகிச்சை பெறுவது மட்டுமின்றி தோல் biopsi - க்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று டிசுல்கிஃப்லி அஹ்மாட் விளக்கினார்.

Related News