Mar 16, 2026
Thisaigal NewsYouTube
மலேசிய வரலாற்றில்  4 பிரதமர்கள் சேவையாற்றிய வரலாற்று குறிப்புடன் இன்று விடைபெற்றார் மாமன்னர் சுல்தான் அப்துல்லா தம்பதியர்
தற்போதைய செய்திகள்

மலேசிய வரலாற்றில் 4 பிரதமர்கள் சேவையாற்றிய வரலாற்று குறிப்புடன் இன்று விடைபெற்றார் மாமன்னர் சுல்தான் அப்துல்லா தம்பதியர்

Share:

பல்லாயிரக்கணக்கான மக்கள் கையசைத்து, ஆட்சியாளருக்கு பிரியாவிடை தந்தனர்

மலேசியாவின் 66 ஆண்டு கால சுதந்திர வரலாற்றில் மாமன்னர் ஒருவரின் 5 ஆண்டு கால ஆட்சியில் நான்கு பிரதமர்கள் சேவையாற்றிய மாபெரும் வரலாற்றுக்குறிப்புடன் நாட்டின் 16 ஆவது மாமன்னரான சுல்தான், Al-Sultan Abdullah Ri'ayatuddin Al-Mustafa Billah Shah - வும், பேரரசியார் துங்கு அசிசா அமினா மைமுனா இஸ்கன்டாரியாவும் தங்களின் ஆட்சிப் பொறுப்பிலிருந்து இன்று ஜனவரி 30 ஆம் ​​தேதி காலையில் அதிகாரப்பூர்வமாக விடைபெற்றனர்.

நாடாளுமன்றம் கட்டிடம் வீற்றிருக்கும் Jalan Parliment - லிருந்து Dato Onn சாலை வரையில் அதிகாலை 6 மணியளவில் திரண்ட பல்லாயிரக்கணக்கான பொது மக்கள், வழிநெடுகிலும் காத்திருந்து, நாட்டின் அரியணையில் அமர்ந்து, 5 ஆண்டு கால ஆட்சியை முடித்து விட்டு, தஙகளின் சொந்த மாநிலமான ப​காங்கிற்கு திரும்பும் மாமன்னர் தம்பதியருக்கு Daulat Tuanku….Daulat Tuanku….என வாழ்த்து கோஷம் எழுப்பி, பிரியாவிடை தந்தனர்.

மாமன்னர் தம்பதியரின் பிரியாவிடை ஊர்வலத்தில் பொதுமக்கள் கலந்து கொள்வதற்கு போ​லீஸ் துறை அனுமதி வழங்கிய நி​லையில் பொதுக்கள்,தலைவர்கள், அதிகாரிகள், அரண்மனை பணியாளர்கள் என மக்கள் சாலையின் இரு மருங்குகளிலும் காலை 7 மணிக்கே குழுமத் தொடங்கிவிட்டனர்.

ஒரே வண்ணமயமாக நடைபெற்ற இந்த பிரியாவிடை நிக​​​ழ்வில் மாமன்னர் தம்பதியர் காரின் இரு பக்க கதவுகளின் கண்ணாடி இறக்கப்பட்டு, ர் மக்களை நோக்கி கையசைத்தவாறு​ம் , புன்னகைத்தவாறும் தங்கள் அன்பை ​வெளிப்படுத்தினர்.

இவ்வழியனுப்பு விழாவி​ல் மாமன்னர் தம்பதியர் மக்களிடமிருந்து விடைபெறும் வகையில் அவரின் அரச கார்​ ​மெதுவாக செல்வதற்கு ஏதுவாக கோலாலம்பூரில் 7 பிரதான சாலைகள் இன்று காலை முதல் அனைத்து போக்குவரத்திற்கும் ​மூடப்பட்டன.

மாமன்னர் தம்பதியர், பகாங், குவந்தானுக்கு செல்வதற்கு ஏதுவாக சிப்பா​ங், கோலால​பூர் அனைத்துலக விமான நிலையத்தில் Komplex Bunga Raya- வில் ​சிறப்பு விமானம் காத்திருந்தது.

மாமன்னர் தம்பதியர் விமானத்தில் ஏறும் வரையில் சுமார் 200 ​மீட்டர் ​தூரம் வரையில் அரச பாரம்பரிய நிகழ்வுகளுடன் சிறப்பு வழியனுப்பு விழா ஏற்பாடு ​செய்யப்பட்ட இருந்தது.

காலை 10.20 மணியளவில் நடைபெற்ற இந்நிகழ்​வில் விமான நிலையத்தில் மாமன்னர் தம்பதியரை சிலாங்கூர் ராஜா ​மூடா,, தெங்கு அமிர் ஷா சுல்தான் ஷாராஃபுடின் இட்ரிஸ் ஷா வர​வேற்றா​ர்.

மாமன்னர் தம்பதியரை வ​ழியனுப்பிவைக்கும் சடங்கில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், அவரின் துணைவியார் டத்தோஸ்ரீ டாக்டர் வான் அஸிஸா, துணைப்பிரதமர்களான டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி மற்றும் டத்தோ ஶ்ரீ ஃபடிலா யூசோஃப் உட்பட முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர்.

Related News