கடந்த மாதம் பதவியிலிருந்து விலகிய சரவா முன்னாள் ஆளுநர் துன் அப்துல் தயிப் மஹ்முட், கூச்சிங்கில் உள்ள ஒரு மருத்துவமனையிலிருந்து பலவந்தமாக கடத்தப்பட்டார் என்று கூறப்படுவது மிக அபத்தமாகும் என்று போலீஸ் படைத் தலைவர் தான் ஶ்ரீ ரசாருடின் ஹுசெயின் தெரிவித்துள்ளார்.
மருத்துவர்களின் ஆலோசனையை மீறி, தயிப் மஹ்முட், வலுக்கட்டாயமாக சக்கர நாற்காலியில் அமர வைக்கப்பட்டு, கடத்தி செல்லப்பட்டார் என்று சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வரும் ம் தகவலில் உண்மையில்லை..
தயிப் மஹ்முட் தமது இல்லத்தில் மனைவி Raghad Kurdi மேற்பார்வையில் உள்ளார் என்று ஐஜிபி விளக்கினார்.
87 வயதான சரவாக் முன்னாள் ஆளுநர், மருத்துவனையிலிருந்து கடத்தப்பட்டார் என்று அவரின் மகன் மற்றும் வழக்கறிஞர்கள் கூறிய குற்றச்சாட்டில் அடிப்படையில்லை. முன்னாள் ஆளுநரை அவரின் பிள்ளைகள் தாராளமாக சென்று பார்க்கலாம் என்று Tan Sri Razaridin Husain குறிப்பிட்டார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த தமது கணவர் தயிப் மஹ்முட்– டை பலவந்ததமாக தூக்கிச் சென்று விட்டதாக தமக்கு எதிராக கூறப்படும் குற்றச்சாட்டை அவரின் மனைவி Raghad Kurdi Taib நேற்று வன்மையாக மறுத்து இருந்தார்.








