May 22, 2026
Thisaigal NewsYouTube
கிள்ளான் பள்ளத்தாக்கில் இடையூறு ஏற்பட்டுள்ள குடிநீர் விநியோகம், நாளை அதிகாலை 3 மணிக்கு கட்டம் கட்டமாக வழக்க நிலைக்கு திரும்பும்
தற்போதைய செய்திகள்

கிள்ளான் பள்ளத்தாக்கில் இடையூறு ஏற்பட்டுள்ள குடிநீர் விநியோகம், நாளை அதிகாலை 3 மணிக்கு கட்டம் கட்டமாக வழக்க நிலைக்கு திரும்பும்

Share:

சிலாங்கூர், ஜூன் 04-

சுங்கை சிலாங்கூர், அணைக்கட்டின் நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பராமரிப்பு மற்றும் சீரமைப்புப்பணிகள், இன்று ஜுன் 5 ஆம் தேதி புதன்கிழமை இரவு 7 மணிக்கு நிறைவு பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் தொடர்பில் கிள்ளான் பள்ளத்தாக்கில் பாதிக்கப்பட்ட 7 பகுதிகளில் உள்ள மக்கள், தங்களுக்கான நீர் விநியோகச் சேவை நாளை ஜுன் 6 ஆம் தேதி வியாழக்கிழமை அதிகாலை 3 மணி முதல், கட்டம் கட்டமாக வழக்க நிலைக்கு திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுவதாக சிலாங்கூர் மாநிலத்தின் பிரதான நீர் விநியோக நிறுவனமான AIR SELANGOR அறிவித்துள்ளது.

நாளை வியாழக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு சுமார் 20 விழுக்காடும், மறுநாள் வெள்ளிக்கிழமை அதிகாலை 3 மணிக்குள் 90 விழுக்காடு வரையிலும் / நீர் விநியோகம் இருக்கும் என்று Pengurusan Air Selangor Sdn. Bhd. நிறுவனமான AIR SELANGOR அறிவித்துள்ளது.

நீர் விநியோகம் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு வரும் ஜுன் 7 ஆம் தேதி வெள்ளிக்கிழமை நண்பகலில் நீர் விநியோகம் முழுமையாக சீரடையும் என்று எதிர்பாக்கப்படுவதாக அந்த நிறுவனம் இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Related News