Jul 28, 2026
Thisaigal NewsYouTube
பங்கோர் தீவில் சுற்றுலாத்துறை வெகுவாக பாதிப்பு
தற்போதைய செய்திகள்

பங்கோர் தீவில் சுற்றுலாத்துறை வெகுவாக பாதிப்பு

Share:

பங்கோர் தீவில் கடந்த ஆறு நாட்களாக குடிநீர் விநியோகத்தில் இடையூறு ஏற்பட்டதைத் தொடர்ந்து உள்ளுர் மக்களும் சுற்றுலாத்துறையினரும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

சீனப்புத்தாண்டையொட்டி நீண்ட விடுமுறையில் பங்கோர் தீவுக்கு வருகை தந்த மக்களும் போதுமான நீர் விநியோகமின்றி பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.

பங்கோரில் அதிகமான ஹோட்டல்களும், குடில்களும் உள்ள Kampung Teluk Dalam மற்றும் Teluk Nibah ஆகிய பகுதிகளில் அன்றாட தேவைக்கு பேரா நீர் வாரியம் லோரிகள் மூலம் நீரை விநியோகித்து வந்தாலும் நீர் போதுமானதாக இல்லை என்று பாதிக்கப்பட்ட மக்கள் கூறுகின்றனர்.

Related News