Oct 10, 2026
Thisaigal NewsYouTube

எஸ்பிஆர்எம் ஊழியர்கள் ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த வேண்டும்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
எஸ்பிஆர்எம் ஊழியர்கள் ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த வேண்டும்

கோலாலம்பூர், ஜூன்.15-

நாட்டில் ஊழலை ஒழிக்கும் அன்றாடப் பணிகளில் செயற்கை நுண்ணறிவு போன்ற புதிய தொழில்நுட்பங்களை மலேசிய ஊழல் தடுப்பு ஆணைய ஊழியர்கள் பயன்படுத்த வேண்டும் என துணைத் தலைமை ஆணையர் டத்தோ அஸ்மி கமாருஸாமான் வலியுறுத்தினார்.

தற்போதைய இணைய யுகத்தில், சிக்கலான ஊழல் குற்றங்களை எதிர்கொள்ள இஃது அவசியம் என்று அவர் கூறினார். புதிதாக நியமிக்கப்பட்ட ஆணையத்தின் கெடா மாநில இயக்குநர் உட்பட மற்ற ஊழியர்களும் ஒழுக்கத்தைப் பேணி, சிறந்த செயல்பாட்டைத் தொடர வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →