Mar 22, 2026
Thisaigal NewsYouTube
50 வயது நபர் கொலை, ஆடவர் தேடப்படுகிறார்
தற்போதைய செய்திகள்

50 வயது நபர் கொலை, ஆடவர் தேடப்படுகிறார்

Share:

கேமரன்மலை, ஜூன் 04-

கேமரன்மலை, திரிங்காப், காய்கறித் தோட்டத்தில் மூன்று தொழிலாளர்களக்கு இடையில் நிகழ்ந்த சண்டையில் 50 வயது மதிக்கத்தக்க நபர் கொல்லப்பட்டது தொடர்பில் தலைமறைவாகி விட்டதாக நம்பப்படும் ஓர் இந்தோனேசிய ஆடவரை போலீசார் தேடி வருகின்றனர்.

ஒருவருக்கொருவர் நன்று அறிமுகமான அந்த மூன்று நபர்களுக்குள் கடந்த மே 30 ஆம் தேதி நடந்த சண்டையில் ஒருவர் கொல்லப்பட்டதுடன், மேலும் ஒரு நபர் கடும் காயங்களுக்கு ஆளானார்.

இச்சம்பவம் தொடர்பில் DENI என்று மட்டுமே அடையாளம் கூறப்பட்ட 30 வயது மதிக்கத்தக்க நபரை போலீசார் தேடி வருவதாக பகாங் மாநில போலீஸ் தலைவர் டத்தோஸ்ரீ யஹாயா ஓத்மான் தெரிவித்தார்.

அந்த நபர், கேமரன்மலையை விட்டு தப்பிச் செல்வதற்கு வாய்ப்பில்லை என்பதால் தேடப்படும் நபர்களின் பட்டியலில் அந்த நபரின் புகைப்படம் வெளியிடப்படும்.

அந்த நபரின் கடப்பிதழை தன் வசம் கொண்டுள்ள காய்கறித் தோட்ட உரிமையாளரும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.

Related News

ஜோகூர் அரச குடும்ப ஹரி ராயா விழாவில் சிங்கப்பூர் அமைச்சர்கள் பங்கேற்பு

ஜோகூர் அரச குடும்ப ஹரி ராயா விழாவில் சிங்கப்பூர் அமைச்சர்கள் பங்கேற்பு

புதுப்பிக்கப்பட்ட சுல்தான் அப்துல் சாமாட் கட்டிடத்தைப் பார்வையிட்ட மகாதீர் – சித்தி ஹாஸ்மா தம்பதியர்

புதுப்பிக்கப்பட்ட சுல்தான் அப்துல் சாமாட் கட்டிடத்தைப் பார்வையிட்ட மகாதீர் – சித்தி ஹாஸ்மா தம்பதியர்

பினாங்கில் குத்துக் காயங்களுடன் காணப்பட்ட பெண்ணின் சடலம்: குற்றச் செயல் இல்லை என போலீஸ் உறுதி

பினாங்கில் குத்துக் காயங்களுடன் காணப்பட்ட பெண்ணின் சடலம்: குற்றச் செயல் இல்லை என போலீஸ் உறுதி

ஹார்மூஸ் நீரிணையில் பதற்றம் நீடிப்பு: மாற்று வழிகளை ஆராய்கிறது பெட்ரோனாஸ்

ஹார்மூஸ் நீரிணையில் பதற்றம் நீடிப்பு: மாற்று வழிகளை ஆராய்கிறது பெட்ரோனாஸ்

மேற்காசிய போர் காரணமாக மானியச் செலவுகள் உயர்வு: ஒரே வாரத்தில் 3.2 பில்லியன் ரிங்கிட்டாக உயர்ந்ததாக அன்வார் தகவல்

மேற்காசிய போர் காரணமாக மானியச் செலவுகள் உயர்வு: ஒரே வாரத்தில் 3.2 பில்லியன் ரிங்கிட்டாக உயர்ந்ததாக அன்வார் தகவல்

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி