May 22, 2026
Thisaigal NewsYouTube
வளர்ப்பு பேத்தியை பாலியல் பலாத்காரம் செய்ததாக முதியவர் மீது குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

வளர்ப்பு பேத்தியை பாலியல் பலாத்காரம் செய்ததாக முதியவர் மீது குற்றச்சாட்டு

Share:

பேராக், ஏப்ரல் 26-

தனது வளர்ப்பு பேத்தியை பாலியல் பலாத்காரம் செய்ததாக முதியவர் ஒருவர் தெலுக் இந்தான் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றச்சாட்டப்பட்டார்.

63 வயது அம்முதியவர் நீதிபதி இந்தான் நூருல் பரீனா ஜைனால் அபிதின் முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்ட போது அக்குற்றத்தை அவர் ஒப்புக் கொள்ளவில்லை.

குற்றம் என்று நிரூபிக்கப்பட்டால் 20 ஆண்டுகள் சிறை மற்றும் பிரம்படி விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 14(a) பிரிவின் கீழ் அந்த முதியவர் குற்றச்சாட்டப்படுவார்.

கடந்த ஆண்டு டிசம்பர் 24 ஆம் தேதி காலை 8 மணியளவில் பேராக், ஹிலிர் பேராக் - வில் உள்ள அவரின் வீட்டின் அறையில் 11 வயது வளர்ப்பு பேத்தியை பாலியல் பலாத்காரம் செய்ததாக அம்முதியவர் மீது குற்றச்சாட்டப்பட்டுள்ளது.

Related News