Mar 22, 2026
Thisaigal NewsYouTube
11 பெற்றோர் ஆசிரியர் சங்கங்களை கல்வி அமைச்சு சந்திக்கவிருக்கிறது
தற்போதைய செய்திகள்

11 பெற்றோர் ஆசிரியர் சங்கங்களை கல்வி அமைச்சு சந்திக்கவிருக்கிறது

Share:

பெட்டாலிங் ஜெயா, ஜூன் 06-

DLP எனப்படும் இரு மொழிப்பாடத் திட்டத்தை மலாய் மொழியில் போதிப்பதற்கு கண்டிப்பாக ஒரு வகுப்பறை ஒதுக்கப்பட வேண்டும் என்று கல்வி அமைச்சு முன்வைத்துள்ள கோரிக்கைக்கு பினாங்கு மாநிலத்தில் தேசிய மாதிரி இடைநிலைப்பள்ளிகள் மற்றும் சீன இடைநிலைப்பள்ளிகள் ஆகியவற்றின் 11 பள்ளி மோலாளர் வாரியங்களும், பெற்றோர் ஆசிரியர் சங்கங்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இதன் தொடர்பில் இவ்விவகாரத்திற்கு நல்ல முறையில் தீர்வு காண்பதற்கு அந்த 11 பள்ளி மோலாளர் வாரியங்களையும், பெற்றோர் ஆசிரியர் சங்கங்களையும் கல்வி அமைச்சு சந்திக்கவிருக்கின்றன.

DLP இரு மொழிப்பாடத் திட்டத்திற்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. குறிப்பாக DLP கல்வியில் கணிதம் மற்றும் அறிவியல் பாடத்தை மலாய்மொழியில் போதிக்கப்படுவதற்கு முழுமையாக எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

மாறாக, இவ்விரு பாடங்களையும் ஆங்கிலமொழியில் போதிக்கப்படும் நடைமுறை தொடர வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தி வருவதாக அரசாங்கப் பேச்சாளர் பாஹ்மி பட்சில் தெரிவித்தார்.

இந்நிலையில் இவ்விவகாரத்திற்கு நல்ல முறையில் தீர்வு காணுமாறு கல்வி அமைச்சர் ஃபத்லினா சிடெக் மற்றும் கல்வி துணை அமைச்சர் வோங் கா வோ ஆகியோர் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதாக தொடர்புத்துறை அமைச்சர் பாஹ்மி பட்சில் குறிப்பிட்டார்.

Related News

SUKE அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து: மோதி விட்டு நிற்காமல் சென்ற கார் - மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் படுகாயம்

SUKE அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து: மோதி விட்டு நிற்காமல் சென்ற கார் - மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் படுகாயம்

பாரம்பரிய உடை அணிந்து ஹரி ராயா கொண்டாடச் சென்றவர்கள் கடலில் விழுந்தனர்

பாரம்பரிய உடை அணிந்து ஹரி ராயா கொண்டாடச் சென்றவர்கள் கடலில் விழுந்தனர்

பணவீக்க அபாயம்: பெட்ரோல் மானியத்தை நீண்ட காலம் தொடர முடியாது – பினாங்கு பயனீட்டாளர் சங்கம்  எச்சரிக்கை

பணவீக்க அபாயம்: பெட்ரோல் மானியத்தை நீண்ட காலம் தொடர முடியாது – பினாங்கு பயனீட்டாளர் சங்கம் எச்சரிக்கை

அடுத்த வாரம் மலேசிய ரிங்கிட் 3.95 நிலையில் நிலைத்தன்மையாக இருக்கும்: பொருளாதார நிபுணர்கள் கணிப்பு

அடுத்த வாரம் மலேசிய ரிங்கிட் 3.95 நிலையில் நிலைத்தன்மையாக இருக்கும்: பொருளாதார நிபுணர்கள் கணிப்பு

ராயா முதல் நாளில் 1,304 சாலை விபத்துகள்: 15 பேர் பலி

ராயா முதல் நாளில் 1,304 சாலை விபத்துகள்: 15 பேர் பலி

பினாங்கு நிலவரி உயர்வு: அந்தோணி லோக்கிடம் சாவ் கோன் இயாவ் அறிக்கை சமர்ப்பிப்பு

பினாங்கு நிலவரி உயர்வு: அந்தோணி லோக்கிடம் சாவ் கோன் இயாவ் அறிக்கை சமர்ப்பிப்பு