Dec 3, 2025
Thisaigal NewsYouTube
மலாய்க்காரர் அல்லாத கட்சிகள் பேதத்தை விதைக்கவில்லை
தற்போதைய செய்திகள்

மலாய்க்காரர் அல்லாத கட்சிகள் பேதத்தை விதைக்கவில்லை

Share:

இந்நாட்டில் மலாய்க்காரர் அல்லாத கட்சிகள் இனதுவேஷத்தையும், பிளவுகளையும் ஏற்படுத்துவதாக துன் மகாதீர் முகமது கூறியுள்ள குற்றச்சாட்டை மசீச மறுத்துள்ளது.

இனதுவேஷத்தை முன்நிறுத்தி, பேதங்களையும் பிளவுகளையும் ஏற்படுத்திக்கொண்டு வருகின்றவர் துன் மகாதீரே தவிர மலாய்க்காரர் அல்லாத கட்சிகள் அல்ல என்று மசீச உதவித் தலைவர் தி லியான் கேர் தெரிவித்துள்ளார்.

துன் மகாதீர் நாட்டிற்கு 22 ஆண்டு காலம் பிரதமராக பொறுப்பேற்று இருந்த போது, மலேசியர்களை இன ரீதியாகப் பிரித்தது மட்டுமல்ல, பழமைவாத மற்றும் தாராளவாதக் கொள்கைகளால் மலாய்க்காரரகளைப் பிளவுப்படுத்தினார் என்பதே சான்றாகும் என்று தி லியான் கேர் கூறினார்.

Related News