Jul 27, 2026
Thisaigal NewsYouTube
இரண்டாவது பெட்ரோல் குண்டு தாக்குதல், அனுமதிக்க முடியாது
தற்போதைய செய்திகள்

இரண்டாவது பெட்ரோல் குண்டு தாக்குதல், அனுமதிக்க முடியாது

Share:

புத்ராஜெயா, மார்ச் 30-

KK மார்ட் வர்த்தகத் தளத்தில் இன்று இரண்டாவது பெட்ரோல் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து, இவ்விவகாரத்தில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமும், உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைப்புட்டின் நசுட்டின் இஸ்மாயில்- லும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக PKR கட்சியின் பாசிர் குடாங் எம்.பி. ஹாசன் அப்துல் கரீம் தெரிவித்துள்ளார்.

அல்லா என்று பொறிக்கப்பட்ட காலூறைகளை விற்பனை செய்த KK மார்ட் - கடைக்கு எதிரான சர்ச்சையை தணிப்பதற்கு பிரதமரும், உள்துறை அமைச்சரும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியமும் அவசரமும் ஏற்பட்டுள்ளதாக அந்த எம்.பி. குறிப்பிட்டுள்ளார்.

இவ்விவகாரம் தொடர்பாக பேரா சுல்தான், சுல்தான் நஸ்ரின் ஷாஹ் தமது அச்சத்தை தெரிவித்து இருப்பதுடன் இதற்கு பொறுப்பான நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளார்.

அரச மலேசிய போலீஸ் படையினரும் இவ்விவகாரத்தில் எந்தவொரு தரப்பும் சட்டத்தை கையில் எடுக்க வேண்டாம் என்று நினைவுறுத்தியுள்ளது.

இந்நிலையில் பல்வேறு இனங்கள் மற்றும் சமயத்தவர்கள் மத்தியில் பதற்ற நிலை ஏற்படாமல் இருக்க இவ்விவகாரம் உடனடியாக கையாளப்பட வேண்டும் என்று ஹாசன் அப்துல் கரீம் கேட்டுக்கொண்டுள்ளார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

இரண்டாவது பெட்ரோல் குண்டு தாக்குதல், அனுமதிக்க முடியாது | Thisaigal News