Jul 28, 2026
Thisaigal NewsYouTube
இடம் மாறினாலும், தடம் மாறவில்லை
தற்போதைய செய்திகள்

இடம் மாறினாலும், தடம் மாறவில்லை

Share:

டிஏபி இடம் மாறினாலும்,தடம் மாறவில்லை என்று அதன்மூத்தத் தலைவர் லிம் கிட் சியாங் தெரிவித்துள்ளார்.

நாட்டில் ஓர் அரை நூற்றாண்டுகளுக்கு மேலாக எதிர்க்கட்சியாக பரிணாமித்த டிஏபி, எதிர்க்கட்சி என்ற நிலையிலிருந்து ஆளும் கட்சி அந்தஸ்துக்கு இடம் மாறினாலும், அதன் தடம் மாறவில்லை. இன்னமும் சரியான தடத்தில் பயணித்துக்கொண்டு இருப்பதை தம்மால் உணர முடிவதாக அக்கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளரான லிம் கிட் சியாங் குறிப்பிட்டார்.

கோலகுபு பாரு இடைத்தேர்தலில் டிஏபி- யின் நடவடிக்கை அறையில் செய்தியாளர்களிடம் பேசிய இஸ்கந்தர் புத்ரி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான லிம் கிட் சியாங், எதிர்கட்சியினர் நிலையிலிருந்து ஆளும் கட்சி நிலைக்கு இடம் மாறும் போது சில மாற்றங்களை எதிர்கொண்டுதான் ஆக வேண்டும்.

அந்த மாற்றத்தை எதிர்கொள்ளும் போது, கட்சியின் அணுகுமுறைகளில் சிலவேறுபாடுகளை காணலாம். ஆனால், அந்த வேறுபாடுகள், கட்சியின் தடத்தை தகர்த்தி விட்டதாக பொருள் கொள்ள முடியாது என்று லிம் கிட் சியாங் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத்தில் டிஏபி இடம் பெற்றது முதல் பல விவகாரங்களில் அக்கட்சி விட்டுக்கொடுக்கும போக்கை கடைப்பிடிக்கிறது என்ற கூறப்படுவது தொடர்பில் லிம் கிட் சியாங் பதில் அளித்தார்.

Related News

சுங்கை பட்டாணியில் மர ஆலைக்கு வெடிகுண்டு மிரட்டல் - போலீஸ் விசாரணை

சுங்கை பட்டாணியில் மர ஆலைக்கு வெடிகுண்டு மிரட்டல் - போலீஸ் விசாரணை

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்