மாணவர்கள் போக்குவரத்து விதிகளை மதிப்பதையும், விபத்து அபாயங்களைக் குறைப்பதையும் உறுதி செய்ய தலைநகரில் உள்ள 122 அரசு மற்றும் தனியார் மேல்நிலைப் பள்ளிகளில் கூடுதல் போக்குவரத்து போலீசார் பணியமர்த்தப்படுவார்கள் என்று கோலாலம்பூர் போலீஸ் தலைமை அதிகாரி டத்தோ ஃபாதில் மார்சூஸ் தெரிவித்துள்ளார்.
எஸ்எம்கே ஆலாம் டாமாய் பள்ளியில் இன்று நடைபெற்ற போக்குவரத்து விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அவர், போக்குவரத்து நெரிசலைச் சீரமைப்பதுடன், மாணவர்கள் பயன்படுத்தும் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் அவர்களின் ஓட்டுநர் உரிமங்களையும் போலீசார் தீவிரமாகச் சோதிப்பார்கள் என்றார். சிறுவயதிலேயே விதிமுறைகளைப் பின்பற்றும் பழக்கம் அவர்களை எதிர்காலத்தில் பொறுப்புள்ள குடிமக்களாக மாற்றும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளும் பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டு, சந்தேகத்திற்குரிய மாணவர்களுக்குச் சிறுநீர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் என்றும் டத்தோ ஃபாதில் மார்சூஸ் நடப்பு ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் ஆபத்தான முறையில் வாகனங்களை ஓட்டியதாக 41 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.








