Jul 4, 2026
Thisaigal NewsYouTube
பாலோ தொகுதியில் பக்காத்தான் ஹராப்பான் கொடிகள் எரிப்பு: வேட்பாளர் டாக்டர் ரூபன் கண்டனம்
தற்போதைய செய்திகள்

பாலோ தொகுதியில் பக்காத்தான் ஹராப்பான் கொடிகள் எரிப்பு: வேட்பாளர் டாக்டர் ரூபன் கண்டனம்

Share:

ஜோகூர் மாநிலத் தேர்தலில் பாலோ சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் டாக்டர் ரூபன் ஆறுமுகம், சென்ட்ரல் பாலோ மற்றும் சாமேக் பகுதிகளில் தங்களின் தேர்தல் கொடிகள் தீயிட்டு எரிக்கப்பட்ட சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பிரச்சாரத்தின் மூன்றாவது நாளில் நடந்துள்ள இந்த வன்முறை, வாக்காளர்களையும் ஆதரவாளர்களையும் அச்சுறுத்தும் ஒரு மலிவான உத்தி என்றும், ஜனநாயகத்திற்கு எதிரானது என்றும் அவர் சாடியுள்ளார். சம்பவ இடத்திற்கு மூத்த தலைவர் கஸ்தூரி பட்டுவுடன் நேரில் சென்று பார்வையிட்ட டாக்டர் ரூபன், அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆதாரமாகக் கொண்டு போலீசில் புகார் அளித்துள்ளார்.

அரசியல் எதிர்ப்பாளர்கள் வன்முறையற்ற, நேர்மையான பிரச்சாரத்தை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்திய டாக்டர் ரூபன், ஆதரவாளர்கள் அமைதி காக்குமாறு கேட்டுக்கொண்டார். மேலும், இச்சம்பவம் குறித்து போலீஸ் துறையும், தேர்தல் ஆணையமான எஸ்பிஆர்ரும் உடனடியாக விசாரணை நடத்தி, குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் டாக்டர் ரூபன் ஆறுமுகம் வலியுறுத்தியுள்ளார்.

Related News

வேலைவாய்ப்புகள் தகுதிக்கும் ஊதியத்திற்கும் ஏற்ப இருப்பதை மனிதவள அமைச்சு உறுதி செய்யும்: அமைச்சர் ரமணன்

வேலைவாய்ப்புகள் தகுதிக்கும் ஊதியத்திற்கும் ஏற்ப இருப்பதை மனிதவள அமைச்சு உறுதி செய்யும்: அமைச்சர் ரமணன்

 ஆற்றில் விழுந்த பெண் மூழ்கி மரணம்: தேடுதல் குழுவினரால் உடல் மீட்பு

ஆற்றில் விழுந்த பெண் மூழ்கி மரணம்: தேடுதல் குழுவினரால் உடல் மீட்பு

லர்க்கின் தொழிற்சாலைகளில் அதிரடி சோதனை: 80 வெளிநாட்டினர், மனிதவள அதிகாரி கைது

லர்க்கின் தொழிற்சாலைகளில் அதிரடி சோதனை: 80 வெளிநாட்டினர், மனிதவள அதிகாரி கைது

சிரம்பான் ஸ்ரீ மஹா இராஜராஜேஸ்வரர் தேவஸ்தான மஹோற்சவ பெருவிழா: பக்திப் பரவசத்துடன் நடைபெற்ற பிரம்மாண்ட பால்குடத் திருவிழா; இன்று மாலை சப்த இரத ஊர்வலம்

சிரம்பான் ஸ்ரீ மஹா இராஜராஜேஸ்வரர் தேவஸ்தான மஹோற்சவ பெருவிழா: பக்திப் பரவசத்துடன் நடைபெற்ற பிரம்மாண்ட பால்குடத் திருவிழா; இன்று மாலை சப்த இரத ஊர்வலம்

ஜேஎஸ்-எஸ்இஇசட் விவகாரம்: பிரதமர் அன்வர் கருத்துக்கு ஓன் ஹஃபிஸ் மறுப்பு

ஜேஎஸ்-எஸ்இஇசட் விவகாரம்: பிரதமர் அன்வர் கருத்துக்கு ஓன் ஹஃபிஸ் மறுப்பு

ஜோகூர் தேர்தல்: பக்காத்தான் ஹரப்பான் கூட்டணி அதிரடி வாக்குறுதி

ஜோகூர் தேர்தல்: பக்காத்தான் ஹரப்பான் கூட்டணி அதிரடி வாக்குறுதி