ஜெம்போல், அக்டோபர்.02-
ஜெம்போல், ஜாலான் பாஹாவ்-கெமாயான் சாலையின் 7ஆவது கிலோமீட்டரில் மூன்று வாகனங்கள் சம்பந்தப்பட்ட விபத்தி்ல் ஒருவர் உயிரிழந்தார். மேலும் இருவர் காயமுற்றனர்.
இந்தச் சம்பவம் இன்று பிற்பகல் 2.20 மணியளவில் நிகழ்ந்தது. இதில் பெரோடுவா கெலிசா ரகக் காரில் பயணம் செய்த 53 வயது நபர் உயிரிழந்தார் என்று அடையாளம் கூறப்பட்டது.








