நேற்று இரவு முதல் பெய்து கொண்டு இருக்கும் அடை மழையினால் வெள்ளத்தில் சிக்கிய ஜோகூர், சிகமாட் மற்றும் குளுவாங் ஆகிய பகுதிகளை சேர்ந்த 89 மாணவர்கள் இன்று புதன் கிழமை SPM தேர்வில் அமர முடியாத நிலைக்கு ஆளாகியிருப்பதாக மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் Noriza Noh தெரிவித்துள்ளார்.
இந்த 89 மாணவர்களும் சிகமாட் மற்றும் குளுவாங் ஆகிய பகுதிகளில் 7 தேர்வு மையங்களில் SPM சோதனையில் அமர வேண்டியவர்கள் ஆவர். SMK Tenang Stesyen, SMK Bandar Putra, SMK Tinggi, SMK Gemereh, SMK LKTP Pemanis, SMK Dato Bentera Dalam மற்றும் SMK Labis Segamat ஆகிய இடைநிலைப்பள்ளிகளை சேர்ந்த மாணவர்களே தேர்வு எழுத முடியாத நிலைக்கு ஆளாகினர் என்று Noriza Noh குறிப்பிட்டார்.








