May 22, 2026
Thisaigal NewsYouTube
கார் மரத்தில் மோதியதில், ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்
தற்போதைய செய்திகள்

கார் மரத்தில் மோதியதில், ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்

Share:

பெட்டாலிங் ஜெயாவில் உள்ள St Ignatius தேவாலயத்திக்குள் சென்ற கார் ஒன்று அந்த வளாகத்தில் இருந்த மரத்தின் மீது மோதியதில் பல பொருட்கள் சேதமடைந்தன.

கடந்த வெள்ளிக்கிழமை, இரவு 11.45 மணியளவில் இச்சம்பவம் நிகழ்ந்ததாக அந்த திருச்சபையின் பாதிரியார் Fr Lawrence Ng ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட கார் மரத்தில் மோதப்படுவதற்கு முன்னதாக, தேவாலயத்தின் நுழைவாயில் வழியாக சென்றதாகவும் மூடப்பட்ட கார் பார்க்கிங் பகுதியிலிருந்த பல நாற்காலி மற்றும் மேசைகள் மீது மோதி சேதம் விளைவித்ததாகவும் Fr Lawrence Ng கூறினார்.

அவ்விபத்தில் கார் ஓட்டுநர் எந்தவொரு காயமின்றி உயிர் தப்பிய வேளை, தீயணைப்பு, மீட்புப் படை மற்றும் போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக அறியப்படுகிறது.

இதுக்கு‌றி‌த்து காவல் நிலையத்தில் புகார் அளித்திருப்பதாகவும் இது தொடர்பாக எந்தவொரு ஆருடங்களையும் சமூக வலைத்தளங்களில் எளிதில் பரப்ப வேண்டாம் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

Related News