Dec 3, 2025
Thisaigal NewsYouTube
பினாங்கில் தீ, எட்டு கடை வீடுகள் அழிந்தன
தற்போதைய செய்திகள்

பினாங்கில் தீ, எட்டு கடை வீடுகள் அழிந்தன

Share:

பினாங்கு, ஜாலான் கெராமாட் டில் உள்ள இரட்டை மாடி கடை வரிசை வீடுகளில், எட்டு வீடுகள் தீயில் அழிந்தன. இச்சம்பவம் நேற்று இரவு 8 மணியளவில் நிகழ்ந்தது. இரவு 8.04 மணியளவில் அவசர அழைப்பை பெற்ற ஜாலான் பேராக் கில் உள்ள தீயணைப்பு நிலையம், அவ்விடத்திற்கு வீரர்களை விரைந்து அனுப்பி வைத்ததுடன் இதர நிலையங்களின் உதவியை கோரியது.

இச்சம்பவத்தில் எட்டு கடை வீடுகள் முற்றாக அழிந்தன. பினாங்கு மாநிலத்தில் பிரசித்திப் பெற்ற நாசி கன்டார் கடையும் இத்தீவிபத்தில் அழிந்ததாக பினாங்கு மாநில தீயணைப்பு இலாகா தலைமை செயலாக்க அதிகாரி அசெலன் ஹாசன் தெரிவித்தார்.

இதில் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று அவர் மேலும் விவரித்தார்.

Related News