May 22, 2026
Thisaigal NewsYouTube
தீப்பற்றிய வாகனத்தில் முதியவர் உடல் கருகி மாண்டார்.
தற்போதைய செய்திகள்

தீப்பற்றிய வாகனத்தில் முதியவர் உடல் கருகி மாண்டார்.

Share:

பேராக், மே 30-

பேராக், ஈப்போ, டேசா லாசி-விலுள்ள ஸ்ரீ குவாங் 3 சாலையில், வாகனம் ஒன்று தீப்பற்றிகொண்டதில், அதிலிருந்த 71 வயது முதியவர் உடல் கருகி மாண்டார்.

நேற்றிரவு மணி 11.46 அளவில் அச்சம்பவம் குறித்து அழைப்பைப் பெற்றதை அடுத்து, பேராக் தீயணைப்பு மீட்பு படையைச் சேர்ந்த 8 உறுப்பினர்கள், 10 நிமிடங்களில் சம்பவ இடத்திற்கு வந்தடைந்தனர்.

எரிந்துக்கொண்டிந்த நிலையில் இருந்த புரோட்டான் சாகா ஈஸ்வரா ரக வாகனத்தில் தீயை முற்றிலுமாக அணைத்த வேளை, உடல்கருகிய நிலையில் முதியவரின் சடலத்தை அவர்கள் மீட்டதாக, பேராக் தீயணைப்பு மீட்பு துறையின் நடவடிக்கை பிரிவு உதவி இயக்குநர் சபரோட்ஸி நோர் அகமது தெரிவித்தார்.

Related News