Jul 29, 2026
Thisaigal NewsYouTube
சொந்தக் கட்சியின் மீது நம்பிக்கை இழக்கும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள்
தற்போதைய செய்திகள்

சொந்தக் கட்சியின் மீது நம்பிக்கை இழக்கும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள்

Share:

எதிர்ப்பார்த்த ஆட்சி மாற்றம் நிகழாத நிலையில், ​​தங்கள் கட்சியின் மீதான நம்பிக்கையை இழந்துவிட்டதால், அதிகமான எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒற்றுமை அரசுக்கு ஆதரவளிப்பார்கள் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் நம்பிக்கை தெரிவித்தார்.

ஆட்சியைக் கவிழ்க்கும் முயற்சியில், போலியான வாக்குறுதிகள் மட்டுமே அவர்களுக்கு வழங்கப்பட்டன. அவை தெளிவாக செயலாக்கம் காணவில்லை. மேலும், அதிகமான இன மதம் சார்ந்த விரோதக் கருத்துகளே கையாளப்பட்டு வந்தன.

உலகின் எந்த மூலைக்கும் அவர்கள் சென்றாலும், உறுதியான ஒற்றுமை அரசாங்கத்தை யாரும் ஒன்றும் செய்து விட முடியாது என அன்வார் தெரிவித்தார்.

போலி வாக்குறுதியால் எமாற்றம் அடைந்த எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒருவர் பின் ஒருவராக தங்களின் ஆதரவை மாற்றிக் கொள்கிறார்கள் என அன்வார் மேலும் சொன்னார்.

Related News