Dec 4, 2025
Thisaigal NewsYouTube
துணைப்பிரதமர் ஜாஹிட் விவகாரத்தில் மக்களின் அதிருப்தியை உணர முடிகிறது - பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார்
தற்போதைய செய்திகள்

துணைப்பிரதமர் ஜாஹிட் விவகாரத்தில் மக்களின் அதிருப்தியை உணர முடிகிறது - பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார்

Share:

துணைப்பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிம் ஹமிடிக்கு எதிரான லஞ்ச ஊழல் வழக்கில் அவர் நிபந்தனையுடன் விடுவிக்கப்பட்டது குறித்து அதிகமானோர் அதிருப்தியில் இருப்பதை தம்மால் உணர முடிவதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
ஆனால், அகமட் ஜாஹிட்டை நீதிமன்றம் விடுதலை செய்ததற்கு முன்னாள் சட்டத்துறை தலைவர் டான்ஸ்ரீ இட்ருஸ் ஹரூண், வலுவான காரணங்களை முன்வைத்திருப்பதாகவும் பிரதமர் விளக்கினார்.

இது முழுக்க முழுக்க சட்டம் சம்பந்தப்பட்ட விவகாரம். இதனை முடிவு செய்தவர் முன்னாள் சட்டத்துறை தலைவர் இட்ருஸ் ஹரூண். எனவே சட்டத்துறை தலைவரின் இந்த முடிவை கேள்வி எழுப்புவதற்கு மக்களுக்கு உரிமை உள்ளது.

ஆனால், டான்ஸ்ரீ முகைதீன் யாசின் நாட்டின் பிரதமராக இருந்த போது, அவரால் சட்டத்துறை தலைவாக நியமிக்கப்பட்ட இட்ருஸ் ஹரூண்தான் இந்த முடிவை எடுத்துள்ளார். எனவே அவரின் முடிவில் தாம் தலையிட இயலாது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் விளக்கம் அளித்துள்ளார்.

Related News