Oct 10, 2026
Thisaigal NewsYouTube

எஸ்பிஎம் தேர்வு முடிவுகளைப் பெற்றவர்களில் 150,557 பேருக்கு உயர்க்கல்விக் கூடங்களில் இடம்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
எஸ்பிஎம் தேர்வு முடிவுகளைப் பெற்றவர்களில் 150,557 பேருக்கு உயர்க்கல்விக் கூடங்களில் இடம்

கோலாலம்பூர், ஜூன்.16-

2024 ஆம் ஆண்டுக்கான எஸ்பிஎம் தேர்வு முடிவைப் பெற்ற மாணவர்களில் ஒரு லட்சத்து 50 ஆயிரத்து 557 பேருக்கு அரசாங்க உயர்க்கல்விக் கூடங்களில் இடம் கிடைத்துள்ளதாக உயர்க்கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

அரசாங்க பொது பல்கலைக்கழகங்களில் தொடர்ந்து உயர்க்கல்வியை மேற்கொள்வதற்கு மொத்தம் 2 லட்சத்து 23 ஆயிரத்து 624 விண்ணப்பங்களை உயர்க்கல்வி அமைச்சு பெற்றதாகவும், அதில் கிட்டத்தட்ட ஒன்றரை லட்சம் பேருக்கு உயர்க்கல்விக் கூடங்களில் இடம் அளிக்கப்பட்டுள்ளாகவும், அதன் எண்ணிக்கையானது 67.33 விழுக்காடாகும்.

மாணவர்களின் அனைத்து விண்ணப்பங்களும் யுபியுஓன்லைன் மூலம் பெறப்பட்டதாக உயர்க்கல்வி அமைச்சு சுட்டிக் காட்டியது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →